Latestஉலகம்

உலகின் பணக்கார குடும்பத்தினரின் பட்டியலில் ஐக்கிய அரபு சிற்றரசு அதிபரின் குடும்பத்தினருக்கு முதலிடம்

லண்டன், டிச 11 – உலகின் பணக்கார குடும்பத்தினரின் பட்டியலில் ஐக்கிய அரபு சிற்றரசு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் குடும்பத்தினர் முதலிடத்தில் இருப்பதாக ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசை ஆளும் அந்த அரச குடும்பத்தினர் 305 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்டுள்ளனர். பெரும்பான்மையான எண்ணெய் வயல் கையிருப்பை ஐக்கிய அரபு சிற்றரசு நாடு கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வர்த்தக மையத்தை கொண்டுள்ள அமெரிக்காவின் வால்டன் குடும்பத்தினர் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அவர்கள் வசம் இருந்துவரும் சொத்து மதிப்பு 259.7 பில்லியன் டாலராகும். இந்த பட்டியலில் 150.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரான்ஸின் ஆடம்பர ஃபேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வெர்தைமர்ஸ் குடும்பத்தினர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!