Latestமலேசியா

கத்தை கத்தையாக RM45 மில்லியன் ரொக்கம் பறிமுதல்; சபா நீர்வளத் துறை முன்னாள் இயக்குநர்

கோத்தா கினாபாலு, டிசம்பர்-5 – 45 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ரொக்கப் பணம் வைத்திருந்த JANS எனப்படும் சபா மாநில நீர்வளத் துறையின் முன்னாள் இயக்குநர் Ag Mohd Tahir Mohd Talib மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அவர் தற்காப்பு வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதை அரசு தரப்பு நிரூப்பித்திருப்பதாக, கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சபா இஸ்லாமிய கட்டடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் 23.69 மில்லியன் ரிங்கிட்டும், மனைவி Fauziah Piut-டுடன் வசித்து வந்த வீட்டில் 8.56 மில்லியன் ரிங்கிட்டும், Mazda காரில் 9.19 ரிங்கிட்டும், Mercedes காரில் 4.13 மில்லியன் ரிங்கிட்டும் என கத்தை கத்தையாக பணம் சிக்கியுள்ளது.

அதோடு அமெரிக்க டாலர், பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ, சீனாவின் யுவான், சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட பல்வேறு அந்நிய நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சாட்சியங்கள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

4.15 மில்லியன் ரிங்கிட் பணமிருந்த அவரின் வங்கிக் கணக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

2005 முதல் 2016 வரை
மைய வசூலிப்பு முறையிலான லஞ்ச நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அவரின் மனைவி Fauziah-வோ, தனது வங்கிக் கணக்கில் 2.22 மில்லியன் ரிங்கிட் பணத்தை வைத்துள்ளார்; அதோடு 921 நகைகள், 93 ஆடம்பர கைப்பைகளுக்கும் அவர் சொந்தக்காரராக இருந்துள்ளார்.

வழக்கு விசாரணை நெடுகிலும் முன்வைக்கப்பட்ட இந்த ஆதாரங்கள் அடிப்படையில், Ag Mohd Tahir அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றம் திருப்திகொள்வதாக நீதிபதி Abu Bakar Manat கூறினார்.

எனவே Ag Mohd Tahir, அவரின் மனைவி Fauziah மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த JANS முன்னாள் துணை இயக்குநர் Lim Lam Bheng ஆகியோர் தற்காப்பு வாதம் புரிய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தற்காப்பு வாதம் அடுத்தாண்டு பிப்ரவரி 26 முதல் 28 வரையும் பின்னர் ஏப்ரல் 28 முதல் 30 வரையிலும் நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!