Latestசிங்கப்பூர்

கத்தோலிக்க தேவாலயத்தின் அருள் பணியாளரை கத்தியால் குத்தியதாக சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், நவ 11 – சிங்கப்பூரில் உள்ள Catholic தேவாலயத்தின் அருள் பணியாளரை கத்தியால் குத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.37 வயதான Basnayake Keith Spencer தடுத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து வீடியே காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக The Stratis Times தகவல் வெளியிட்டுள்ளது.

சிறார்களுக்கான காலை திருப்பலி கொண்டாடத்தின்போது சென்ட் ஜோசப் தேவாலயத்தின் அருள் பணியாளரான Christopher Lee லீயின் நாக்கு, இடது மேல் உதடு மற்றும் வாயில் காயம் ஏற்படுத்தியதாக Spencer மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Christopher Lee சீரான நிலையில் இருப்பதோடு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் குணமடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு டிசம்பர் 2 ஆம் தேதி மறுவாசிப்பிற்கு செவிமடுக்கப்படும் . Spencer மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் , ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் பிரடிம்படி அல்லது அபராதமும் விதிக்கப்படலாம். இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதம் அல்லது சமயம் சார்ந்த நோக்கங்கள் எதுவும் இல்லையென சிங்கப்பூர் போலீசார் உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தின் எதிரொலியாக, வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!