ஒட்டாவா, பிப் 23- அவசரநிலையை பயன்படுத்தி டிரக் ஒட்டுனர்களின் மறியல் மற்றும் அவர்களது முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கத்தின் நடவடிக்கையை கனடிய பிரதமர் Justin Trudeau தற்காத்தார்.
எனினும் இப்போதைய மிரட்டல்களை சமாளிப்பதற்கு அவசர நிலை தொடர்ந்து இருக்கும் என அவர் தெரிவித்தார். சட்டவிரோதமான மறியல்கள் தலைநகர் ஒட்டாவாவில் முற்றுகையை ஏற்படுத்தியதோடு அமெரிக்கா எல்லையை கடப்பதற்கும் தடையாக இருந்த டிரக் ஒட்டுனர்களின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் அவசர நிலை அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததாக Justin Trudeau கூறினார்.
எல்லையை கடந்து செல்லும் டிரக் ஓட்டுனர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக கனடாவில் டிரக் ஓட்டுனர்கள் பெரிய அளவில் மறியலில் ஈடுபட்டனர்.