புது டெல்லி, டிசம்பர்-14, கனடாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் வன்முறைகளில் கொல்லப்பட்டிருப்பது குறித்து இந்தியா கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க கனடிய அதிகாரத் தரப்புடன் பேசி வருவதாக, இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) கூறினார்.
கொல்லப்பட்ட மூவரில் ஒருவரது அடையாளம் மட்டுமே இதுவரை தெரிய வந்துள்ளது.
20 வயது Harshandeep Singh டிசம்பர் 6-ம் தேதி எட்மண்டன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அக்கொலைத் தொடர்பில் இருவர் கைதுச் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனடாவிலிருக்கும் இந்திய பிரஜைகள் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலேயே ஆக அதிகமாக கனடாவில் தான் சுமார் 450,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் தவிர, மற்ற இந்தியர்களும் கணிசமான அளவில் அங்கு வசித்து வருகின்றனர்.