Latestஉலகம்

கனடாவில் கைத்துப்பாக்கிகளின் அனுமதி முடக்கம்

ஒட்டாவா, மே 31 – கனடாவில் சொந்தமாக கைத் துப்பாக்கிகள் வைத்திருப்கும் அனுமதியை முடக்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் Justine Trudeau ஆலோசனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெரிய அளவில் துப்பாக்கிக் சூடு சம்பவங்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து துப்பாக்கிகளை சொந்மாக வைத்திருப்பதற்கான அனுமதி முடக்கப்படுவதுடன் அதன இறக்குமதி செய்வதற்கும் கனடா தடையை விதிக்கும் என்றும் Justine கூறினார். இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆளும் லிபரல் கட்சி ஒரு இடத்தை மட்டுமே பெரும்பான்மைக் கொண்டிருந்த போதிலும் அந்த உத்தேச மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி எவரும் கை துப்பாக்கிகளை சொந்தமாக உரிமம் கொண்டிருக்காத வகையில் இதற்கான முடக்கம் இருக்கும் என செய்தியாளர் கூட்டத்தில் Justine trudeau அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!