
ஒட்டாவா , மார்ச் 29 – கனடாவில் மகாத்மா காந்தியின் மற்றொரு சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்திருப்பது குறித்து இந்தியா தனது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. கனடாவின் Burnaby பல்கலைக்கழக வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக Vancouver ரிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்தது. இந்த சம்பவத்தை கடுமையாக கருதுவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்கும்படி இந்திய தூதரக அதிகாரி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே Ontario வில் Hamilton நகரில் மாநகர் மன்றத்திற்கு அருகே உள்ள காந்தி சிலை மீது இம்மாதம் 23 ஆம் தேதி பெய்ன்ட் ஊற்றப்பட்ட சம்வம் நடத்துள்ளது.