
ஒட்டாவா, ஜன 4 – கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க விதிக்கப்பட்டிருக்கும் ஈராண்டு கால தடை அமலுக்கு வந்திருக்கிறது. இவ்வேளையில், அந்த தடையிலிருந்து, அந்நாட்டில் குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிக உயர்வான வீட்டு விலையைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவில், உள்நாட்டு மக்கள் சொந்த வீட்டினைப் பெற்றிருப்பதற்காக அந்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. தற்போதைக்கு கனடாவில் வீடொன்றின் சராசரி விலை ஐந்து லட்சத்து 68,00 டாலராகும். இது அந்நாட்டில் சராசரி குடும்ப வருமானத்தைக் காட்டிலும் 11 மடங்கு அதிகமாகும்.