புக்கிட் ஜாலில், ஜனவரி-8, புக்கிட் ஜாலில், அக்சியாத்தா அரேனா (Axiata Arena) அரங்கின் கூரையில் கசிவு எற்பட்டு மழை நீர் ஒழுகிய சம்பவத்திற்கு, மலேசிய விளையாட்டரங்க கழகமான PSM மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இரசிகர்களிடம் மன்னிப்புக் கோருவதாக அக்கழகம் அறிக்கையொன்றில் கூறியது.
மழைக் நீர் கசிவால் அங்கு நடைபெற்று வரும் மலேசியப் பொது பூப்பந்து போட்டி நேற்று சிறிது நேரத்திற்குத் தடைப்பட்டது.
எனினும், ஆடுகளத்தில் ஒழுகிய நீரை குத்தகையார் விரைந்து செயல்பட்டு அகற்றியதாக PSM கூறியது.
இதையடுத்து இரவு 8 மணி வாக்கில் ஆடுகளத்தைப் பயன்படுத்த முடிந்தது.
அப்பிரச்னை மீண்டும் நிகழாதிருக்க உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில், போட்டி முடியும் வரை 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரங்கின் கூரைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருப்பர்;
அதே சமயம் குத்தகையாளரும் JKR-ரும் பழுதுப் பார்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக PSM கூறியது.