கோலாலம்பூர், நவம்பர்-28, கோலாலம்பூர், ஸ்தாப்பாக், கம்போங் ஆயர் தாவார் அருகேயுள்ள கட்டுமானத் தளத்தில் நேற்று மாலை கிரேன் கோபுரம் சரிந்து விழுந்தது.
கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் மாலை 6.18 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறை, முழுமையான பரிசோதனைகளுக்குப் பிறகு அங்கு எவரும் காயமடையவில்லை என்பதை உறுதிபடுத்தியது.
அச்சம்பவம் குறித்த மேல் நடவடிக்கை, சம்பந்தப்பட்ட கட்டுமானத் தள நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுங்கை போனஸ் PPR குடியிருப்பு அருகே ஏற்பட்ட அச்சம்பவத்தின் புகைப்படம் முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.