
கோலாலம்பூர், மார்ச் 23 – நேற்று மாலை, கிள்ளான் பள்ளத்தாக்கில், சில கொமியூட்டர் ரயில் நிலையங்களில் போக்குவரத்து சேவை தடைப்பட்டதை அடுத்து, KTMB நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இடியுடன் கூடிய அடைமழையின் காரணமாக, சில நிலையங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டதை அடுத்து, பயணங்கள் தாமதமடைந்ததாக அந்நிறுவனம் கூறியது.
Kepong- Rawang, Rasa- Slim River, Batu Caves- Taman Wahyu இடையிலான ரயில் பயணங்கள் நேற்று 2 மணி நேரம் வரை தாமதமானது.