Latestமலேசியா

கப்பல் கட்டும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மீது ரி.ம 21.08 மில்லியன் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆக 16 – போவ்ஸ்டிட் நேவல் கப்பல் கட்டும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் அகமட் ரம்லி முகமட் நோர் 21.08 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடி செய்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. Bousted naval Shipyard Sdn Bhd ட்டின் வாரிய உறுப்பினர்களின் அனுமதியின்றி மோசடி நோக்கத்தோடு மூன்று வெவ்வேறு நிறுவனங்களுக்கு 21,08 மில்லியன் ரிங்கிட்டை அங்கீகரித்ததாக கடற்படையின் முன்னாள் தளபதியுமான அகமட் ரம்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 409 ஆவது விதியின் வீழ் 78 வயதுடைய ரம்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Suzana Hussain முன்னிலையில் குற்றச்சாட்டு வாசித்தபோது ரம்லி அதனை மறுத்தார். அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 5 லட்சம் ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. நவம்பர் 24ஆம் தேதி அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு வரும். கடற்படைக்கு 900 கோடி ரிங்கிட் செலவில் ஆறு கப்பல்களை கட்டும் திட்டம் குத்தகை Bousted naval Shipyard Sdn Bhd ட்டிற்கு வழங்கப்பட்டது. முதல் கப்பல் கட்டும் பணி 2017ஆம் ஆண்டு தொடங்கி அத்திட்டம் முழுமையடைந்து 2019அம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். எஞ்சிய கப்பல்கள் ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அந்த ஆறு கப்பல்களும் கட்டி முடிக்கவும் இல்லை. திட்டமிட்டபடி அந்த கப்பல்கள் ஒப்படைக்கப்படவும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!