
ஈப்போ, மே 10 – விபத்து ஒன்றில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலை செய்ய இயலாத நிலைக்கு உள்ளானதோடு வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்த முன்னாள் அரசு ஊழியரான கே. கமலநாதனுக்கு விடிவு காலம் பிறந்தது. ஈப்போவில் டேஷா ஸ்ரீ வாங்கி எனும் இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவருக்கு மாநில அரசாங்கம் நிலப்பட்டா வழங்கியது.
நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தம்மை கடந்த 2021 ஆம் ஆண்டு மாநில ம.இ.கா.வின் தலைவர் டத்தோ வி. இளங்கோவின் கவனத்திற்கு பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். மூக்கன் கொண்டுச் சென்றதன் மூலம் இந்த விவகாரம் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சராணி முகமட்டின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று கமலநாதன் தெரிவித்தார்.
அந்த ஆண்டு ( 2021) இல் தீபாவளி தினத்தன்று தமது இல்லத்திற்கு வருகை அளித்த டத்தோஸ்ரீ சராணி தனது நிலமையை கேட்டறிந்து புதிய வீட்டு கட்டிக்கொள்ள நிலம் வழங்குவதாக உறுதி அளித்தார். அதன் படி பத்துகாஜாவில் உள்ள பெம்பான் நிலத்திட்டத்தில் புதிய வீட்டைக் கட்டிக்கொள்ள நில உறுதி கடிதம் மாநில அரசாங்கம் வழங்கியதாக கூறினார். அதற்கான பிரிமியம் தொகையை பேரா மாநில ம.இ.கா. வழங்கும் என்தோடு அந்த நிலத்தில் வீட்டைக் கட்டிக் கொடுக்க ம.இ.கா உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பேரா மாநில ம.இ.கா. தலைவர்
டத்தோ வ. இளங்கோ உறுதி அளித்தார்.