கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – ஒரே வாரத்தில் கோலாலம்பூரில் நடந்துள்ள அடுத்தச் சம்பவமாக, கம்போங் கெரின்ச்சியில் (Kampung Kerinchi) நிலம் உள்வாங்கியுள்ளது.
ஜாலான் பந்தாய் பெர்மாயில் (Jalan Pantai Permai) கால்வாயின் ஒரு பகுதி, நில அமிழ்வில் பாதிக்கப்பட்டுள்ளதை, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL உறுதிபடுத்தியது.
எனினும், திங்கட்கிழமை இரவு 10 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நாடா (saftety tape), தண்ணீர் தடை கூம்புகள் (water barrier), முக்கோண கூம்புகள் உள்ளிட்டவை அங்கு வைக்கப்பட்டன.
வைரலான புகைப்படங்களைப் பார்க்கும் போது, கால்வாய் உள்வாங்கியதில், அருகிலிருந்த நடைபாதையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.
முன்னதாக, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்டு, இந்திய பிரஜையான மாது அதில் விழுந்து காணாமல் போனார்.
அவரைத் தேடி மீட்கும் பணிகள் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளன.
இப்படி அடுத்தடுத்து நில அமிழ்வுச் சம்பவங்கள் தலைநகரில் நிகழ்ந்திருப்பது, நெட்டிசன்களின் பேச்சுப் பொருளாகியுள்ளது.