Latestமலேசியா

கம்போங் பண்டான் வீடமைப்புப் பகுதிகளை உடைக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு – ஜொனாதன் வேலா

கோலாலம்பூர், செப்டம்பர் 25 – தலைநகர் கம்போங் பண்டானின், மேட்டுக் கம்பம் எனும் பிரபலமாக அறியப்படும் Kampung Indian Settlementல் உள்ள வீடமைப்புப் பகுதிகள் அரசாங்கத்தின் நிலம் என்பதால், அங்கு சட்டவிரோதமாகக் குடியிருக்கும் 10 குடும்பங்களை வெளியேறும்படி கோலாலம்பூர் நில மற்றும் கனிமவள அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அங்குள்ள வீடுகளை வருகின்ற செப்டம்பர் 30ஆம் திகதி அன்று, உடைக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ஏற்கமுடியாத நிலையில், அங்குத் தவித்துக் கொண்டிருந்த குடும்பங்களின் புகார்களைப் பெற்ற பிரதமரின் அரசியல் செயலாளரின் உதவி அதிகாரி ஜோனாதன் வேலா, தெனாகா நேஷனல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி வரை அந்த உத்தரவை ஒத்திவைக்கும் அனுமதியைப் பெற்றிருக்கின்றார்.

சம்மந்தப்பட்ட பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் குடும்பங்கள் பலர் அங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

எனினும், அந்த இடம் அரசங்கத்தின் நிலமென்றும், அங்கு தெனாகா நேஷனலின் உயர் அழுத்தக் கோபுரங்கள் இருப்பதால் அதன் கீழ் வசிப்பது ஆபத்து எனும் நிலையில் அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தெனாகா நேஷனலின் உயர் அழுத்த கோபுரங்களால் இதற்கு முன்பு அங்கு தீ விபத்துகள் நடந்துள்ளதையும் அங்கு வாழும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அஞ்சல் வசதி போன்ற அடிப்படை வசதிகளின்றியும் வாழ்த்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், தற்போது திடீரென்று மாற்று வீடுகள் எதுவும் கொடுக்காமல் வீட்டை உடைத்தால் எங்கே செல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடும் தங்களுக்கு அரசாங்கம் வழிகாட்ட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்று வணக்கம் மலேசியாவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இன்று கம்போங் பண்டானுக்கு வருகை அளித்த ஜோனாதன் வேலா, இந்த கம்போங் பண்டான், மேட்டுக் கம்பம் குடியிருப்பாளர்களுக்கு மாற்றுவீடு கிடைக்க தேவையான உதவிகளை செய்ய முயற்சிகள் எடுப்பேன் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!