
பேங்காக் , ஜன 1 – கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டவர்களில் மலேசிய பெண்ணும் அடங்குவார். புதன்கிழமையன்று Poipet நகரிலுள்ள Grand Diamond city Hotel லில் உள்ள சூதாட்ட விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 73 வயது மலேசிய பெண், அவரது தாய்லாந்து கணவர் உட்பட 26 பேர் மரணம் அடைந்தனர் என உறுதிப்படுத்தப்பட்டது. அந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரும் அவரது 70 வயது கணவரும் தமது நண்பரின் திருமணத்திற்காக Poipet ட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த தீ விபத்து குறித்த தகவல் வெளியானவுடன் குடும்ப உறுப்பினர்கள் தம்மை தொடர்பு கொள்ள முயன்றதாக இறந்த பெண்ணின் உறவினரான எம். ரமேஷ் தெரிவித்தார். அந்த பெண்ணின் மகன் மருத்துவமனை மற்றும் அருகேயுள்ள பௌத்த ஆலயத்திற்கு சென்று தேடியதாகவும் ஆனால் அவரது பெற்றோரை கண்டறிய முடியவில்லை. அதன்பின் வெள்ளிக்கிழமையன்று ஹோட்டல் அறையில் குடும்ப உறுப்பினர்கள் தேடியபோது கரும்புகையினால் சுவாசிக்க முடியாமல் அந்த தம்பதியர் இறந்து கிடந்ததாக ரமேஷ் தெரிவித்தார்.