Latestஉலகம்

3700 வருட பழைய Lipstick!; ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு!

ஈரான், மார்ச் 15 – தென்கிழக்கு ஈரானில் சுமார் 3700 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச் சாயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பழமையான லிப்ஸ்டிக் என நம்பப்படுகிறது. இந்த லிப்ஸ்டிக் உலோக நாகரிக காலத்தை சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மெழுகு, விலங்கு கொழுப்பு மற்றும் களிமண் ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்டிருக்கும் இந்த லிப்ஸ்டிக், ஒரு பெண்ணின் பண்டைய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உதட்டுச் சாயம் சிவப்பு நிறம் என்றும், ஒரு வகை ஈய சாயத்தால் செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பண்டைய கால லிப்ஸ்டிக்கானது தற்கால லிப்ஸ்டிக் தயாரிப்பு முறைகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது. இது பழங்கால சமூகத்தின் ஒப்பனை நடைமுறைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!