
நொம்பென் , அக் 30 – தாய்லாந்து எல்லைக்கு அருகேயுள்ள கம்போடி ஹோட்டலிலுள்ள சூதாட்ட விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. புதன்கிழமையன்று இரவு 11. 30 அளவில் நிகழ்ந்த அந்த தீ விபத்தின்போது அதிகமானோர் அந்த சூதாட்ட விடுதியில் இருந்துள்ளனர். அந்த கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ஜன்னல் வழியாக பலர் வெளியே குதிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களிலும் காண முடிந்தது. ஹோட்டல் அறைகளில் கரும்புகையினால் சுவாசிக்க முடியாமல் பலர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஹோட்டல் அறைகளில் இன்று காலையில் கூட சிலரது சடலங்கள் மீட்கப்பட்டன. அந்த தீ விபத்தில் 70 பேர் காயம் அடைந்ததாக சி.என்.என் தகவல் வெளியிட்டது.
அந்த சூதாட்ட விடுதியில் குறைந்தது 400 பேர் வெலை செய்கின்றனர். சம்பவம் நடந்த அன்று அந்த சூதாட்ட விடுதியில் வழககத்தை விட அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். இறந்தவர்களில் தாய்லாந்து, சீனா, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என கூறப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு அளவுக்கு அதிகமான மின் அலங்காரம் காரணமாக தீ பரவியிருக்கலாம் என்றும் தகவல்ககள் வெளியாகின.