
கோலா பெராங், ஆக 26 – Kuala Berang கில் டுரியான் தோட்டத்தில் இருந்தபோது கரடி தாக்கியதால் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். தமது தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்தபோது மாலை மணி 4.30 அளவில் கரடி தம்மை தாக்கியதாக Al Amin Ratna Shariman Alias என்ற அந்த இளைஞர் தெரிவித்தார். அதற்கு முன்னர் அந்த கரடி தங்களது தோட்டத்தில் டுரியான் பழத்தை உட்கொண்டிருந்ததாக அல் அமின் கூறினார். எனினும் நல்ல வேளையாக தாம் வைத்திருந்த பாராங் கத்தியை தற்காப்புக்கு பயன்படுத்தியதால் தாம் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார். உடலில் கரடியின் நகக் கீறல்களால் காயத்திற்கு உள்ளானதால் அல் அமின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.