புதுடில்லி. பிப் 21 – இந்தியாவில் Faridabad ட்டில் அடுக்கு மாடி வீட்டின் 12 ஆவது மாடியில் உள்ள முற்றத்தில் ஆடவர் ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காணொளி ஒன்று சமூக வளைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த காட்சியை எதிரே குடியிருக்கும் மற்றொரு அடுக்கு மாடி வீட்டை சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் காணொளியாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல உடற்பயிற்சியில் ஈடுபட்டுவரும் அந்த ஆடவர் தமது பாதுகாப்பு குறித்து சிறிது கூட பொருட்படுத்தாமல் இப்படியொரு செய்கையில் ஈடுபடுவது குறித்து வலைத்தலைவாசிகளில் சிலர் சாடினார்.
இதனிடையே இந்த உடற்பயிற்சியில் ஈடுபடும் 56 வயதுடைய ஆடவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அந்த அடுக்குமடி குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.