
புதுடில்லி, ஜன 16 – பூனேவில் கராத்தே போட்டியைத் தொடக்கிவைத்தபோது சேலையில் எதிர்பாரதவிதமாக திடீரென தீப்பிடித்ததால் காங்கிரஸ் தேசியவாத எம்.பி Supriya Sule காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்தபோது மேசையில் வைத்திருந்த குத்து விளக்கில் அவரது சேலை பட்டதால் தீ பற்றி எரியும் காட்சி சமூக வலைத்தளதிலும் பகிரப்பட்டது. தாம் நலமாக இருப்பதாகவும் எவரும் கவலை அடைய வேண்டியதில்லை யென சுப்ரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.