
ஜொகூர், ஜன 26 –மெர்சிங்கில், ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் அறுவர் அதிஷ்டவசமாக தப்பினர்.
சிங்கப்பூரிலிருந்து மெர்லிங்கிற்கும், பின்னர் அங்கிருந்து பஹாங்கிற்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் திடீர் வெள்ளத்தில் சிக்கியதாக, மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் ரசாக் அப்துல்லா தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, வெள்ளத்தில் அடித்துச் செல்லும் உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை சிலர் காப்பற்ற முயலும் 27 வினாடி காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.