புது டில்லி, பிப் 9 – முஸ்லீம் மாணவிகளின் ‘ஹிஜாப்’ உடை அணியும் விவகராத்தால் கேரளாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் உயர் கல்வி கூடங்கள் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது .
மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவரைச் சுற்றி, காவித் துண்டு அணிந்த மாணவர் கூட்டம் ஒன்று ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அதையடுத்த நிலைமையைக் கட்டுப்படுத்த கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு மூன்று நாட்கள் விடுமுறை அளித்திருக்கின்றது.