கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – கற்பழிப்பு வழக்கொன்றின் விசாரணயை மூடுவதற்காக 12,000 ரிங்கிட்டை லஞ்சமாகக் கேட்டுப் பெற்ற அமுலாக்க அதிகாரியை, மலேசிய ஊழல் தடுப்பாணையத்தின் (MACC) பினாங்குக் கிளை கைதுச் செய்துள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று காலை பினாங்கு MACC தலைமையகத்திற்கு வந்த போது 40 வயது அவ்வாடவர் கைதானார்.
பினாங்கு MACC இயக்குநர் மொஹமட் ஃபுவாட் பீ பஸ்ரா (Mohd Fuad Bee Basrah) அதனை உறுதிப்படுத்தினார்.
அவர் 2019-ல் அக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் 165-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்ட சந்தேக நபர், இன்று பெர்லிஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்.