
வாஷிங்டன், ஜன 17 – கலிபோர்னியாவில் துப்பாக்கி ஏந்திய இரு நபர்கள் விடியற்காலை 3.30 மணியவில் ஒரு வீட்டில் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் அதன் தாயார் உட்பட அறுவர் மாண்டனர். இந்த தாக்குதலுக்கு போதைப் பொருள் மற்றும் குண்டர் கும்பல் தகராறு காரணமாக இருக்கலாம் என போலீஸ் அதிகாரி Mike Bourdreaux தெரிவித்தார். அண்டை வீட்டுக்காரர் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீசார் வந்தனர். இந்த சம்பவத்தில் 17 வயது தாயும் அவரது ஆறு மாத குழந்தையும் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்திற்கு உள்ளானது துயரமான ஒன்று என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வீட்டில் இருந்தவர்கள் உள்ளேயும் வெளியிலும் சிலர் இறந்து கிடந்தனர். அந்த சம்பவத்தில் வீட்டிற்கு உள்ளே இருந்த இருவர் உயிர் தப்பினர். ஒரு குடும்பத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.