
சன் பிரான்சிஸ்கோ, ஜன 10 – அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மோசமான புயலினால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 12 பேர் மரணம் அடைந்தனர். அதோடு இதுவரை 25,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்த வெளியேறினர். பிரிட்டிஷ் இளவரசர் Harry, அவரது துணைவியார் Meghan உட்பட பல்வேறு பிரபலங்களும் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவர். Montecito ஒட்டு மொத்த நகரும் அருகேயுள்ள Santa Barbaraa கடலோர பகுதியிலுள்ள வீடுகளும் புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக சேதம் அடைந்தன. அங்குள்ள மக்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவு அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.