
சன் பிரான்சிஸ்கோ, ஜன 2 – கலிபோர்னியாவின் தென்கிழக்கே Rio Dell வட்டாரத்தில் இன்று காலையில் ரெக்டர் கருவியில் 5.4 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் முதல் முறையாக Rio Dell வட்டாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அளவில் அடிப்படை வசதிகளை பாதித்ததால் அங்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து Rio Del வட்டார மக்கள் இன்னமும் மீள முடியாத நிலையில் இபோது அங்கு இரண்டாவது முறையாக அங்கு நில நடுக்கம் ஏற்பட்டது மக்களின் இயல்பு வாழக்கையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. நில அதிர்வின் காரணமாக கலிபோர்னியாவின் முக்கிய Fernbridge பாலம் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.