
கோலாலம்பூர், மார்ச் 16 -வெளிநாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிக்கான வழிகாட்டியை அமைச்சர் Fahmi Fadzil வெளியிட்டதாக வெளியான தகவலை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு மறுத்துள்ளது.
அந்த வழிகாட்டியை Fahmi வெளியிடவில்லையென அமைச்சு வெளியிட்ட விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு மற்றும் அதில் பங்கேற்கும் வெளிநாட்டு கலைஞர்களுக்கான நிபந்தனைகளை எளிதாக்கும் நோக்கத்தில் அமைச்சின் அகப்பக்கத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த புதிய வழிகாட்டி அறிக்கை அமைந்திருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Puspal எனப்படும் வெளிநாட்டு கலைஞர்களுக்கான படப்பிடிப்பு மற்றும் படைப்புகளுக்கான விண்ணப்ப செயற்குழுவின் அந்த வழிகாட்டியை வரைந்திருந்தது.