ஜகார்த்தா, பிப் 21 – ஒரு செயலை விநோதமாக செய்து அதை வைரலாக்கிவிடுவதற்காகவே தற்போது சிலர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், கல்லறையில் விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதில் பொதுமக்கள் கலந்து கொண்ட காணொளி வைரலாகியிருப்பதாக, இந்தோனேசியாவின் Berita Hits ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த காணொளியில், மக்கள் உணவருந்துவதையும், பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. மேடைக்கு முன் இருக்கும் கல்லறைகளின் மீது ஒலி பெருக்கி கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த காணொளியைப் பார்த்த பலர் பலவிதமான கருத்துகளைப் பதிவிட்டிருக்கும் நிலையில் ‘இரு உலகிற்கான நிகழ்ச்சி இதுதானோ’ என ஒரு வலைத்தளவாசி குறிப்பிட்டுள்ளார்.