Latestமலேசியா

கல்வத் குற்றத்திற்காக திரெங்கானுவைச் சேர்ந்த ஆடவருக்கு 6 கசையடி; முதல் முறையாக பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றும்படி நீதிபதி உத்தரவு

கோலாத் திரெங்கானு, நவ 20 – தொடர்ந்து கல்வத் குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக திரெங்கானுவைச் சேர்ந்த ஆடவன் ஒருவனுக்கு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஆறு கசையடி தண்டனை விதிக்கும்படி திரெங்கானு ஷரியா உயர்நீதிமன்றத்தின் முதிர்நிலை நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

திருத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டின் திரெங்கானு ஷரியா குற்றத்தின் 31 (a) விதியின் கீழ் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றத்தை 42 வயதுடைய முகமட் எப்பெண்டி அவாங் ( Mohd Affendi Awang)
ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி இந்த தீர்ப்பை வாசித்தார்.

மூன்றாவது முறையாக கல்வத் குற்றம் புரிந்த வீடு கட்டுபவரான முகமட் எப்பெண்டிக்கு எதிரான தண்டனை டிசம்பர் 6 ஆம் தேதி கோலாத் திரெங்கானுவில் Masjid Al -Muktafi Billah Shah பள்ளிவாசலில் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிக்கு கசையடியுடன் 4,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 4 மாதம் சிறைத் தண்டனையை நிறைவேற்றும்படியும் நீதிபதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!