Latestமலேசியா

‘கல்வாத்’ ஜோடியிடமிருந்து பணம் பறித்த இரு துணை போலீசார்

ஜோகூர் பாரு , ஆகஸ்ட் 8 – Khalwat எனப்படும் தவறான நடத்தையின் காரணமாக பிடிப்பட்ட காதல் ஜோடியிடமிருந்து பணம் பறித்திருக்கின்றனர் இரு துணை போலீஸ் அதிகாரிகள்.

ஜோகூர் பாருவில், பேரங்காடியின் பின்புறம் காருக்குள் தவறான செயலில் ஈடுபட்டிருந்த அந்த ஜோடியினரை அவ்விரு துணை போலீஸ் அதிகாரிகளும் பிடித்தனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அவ்விரு துணை போலீஸ் அதிகாரிகளும் 500 ரிங்கிட்டை கேட்டிருக்கின்றனர்.
பின்னர், கையில் பணம் இல்லாததால், அவர்களிடம் இருந்த ATM அட்டையையும், கடவுச் சொல்லையும் பெற்றுக் கொண்டு , 1,000 ரிங்கிட்டை ATM இயந்திரத்திலிருந்து எடுத்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரை அடுத்து அவ்விரு துணை போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் Raub Selamat தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!