Latestமலேசியா

கல்விக்கு என்றும் முக்கியத்துவம் வழங்கும் ம.இ.கா! – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிசமபர் 16 – இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ம.இ.கா தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்து வருவதாக ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கெடா மாநிலத்திலுள்ள AMIST பல்கலைக்கழகத்தின் மூலமாக ம.இ.கா, இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மாபெரும் உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், அடுத்தாண்டு 15 மில்லியன் ரிங்கிட் அளவிற்கு உபகாரச் சம்பளமும் ஒதுக்கப்படும் என அவர் அறிவித்தார்.

அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் எந்தவொரு பதவிகள் இல்லையென்றாலும், இந்திய சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக ம.இ.கா தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்று ம.இ.காவின் தேசிய தலைவரான டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் 59ஆவது பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் வாழ்த்து தெரிவித்து, கட்சி தலைவரின் ஆற்றலையும், கட்சியைச் சீரிய திட்டங்களுடன் வெற்றிகரமாக வழிநடத்தும் அவரது சிறந்த பணிகளையும் பாராட்டினார்.

இன்று ம.இ.கா நேதாஜி மண்படத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!