
கோலாலம்பூர், மார்ச் 23 – வசதி படைத்த மாணவர்கள் கட்டணம் செலுத்தி படிக்கக் கூடிய , MRSM – மாரா இளநிலை கல்லூரியைக் கட்டும் பரிந்துரை , அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டை உட்படுத்தி இருக்காது என , துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தனியார் துறை மற்றும் நிதி கழகங்களின் ஒத்துழைப்போடு அத்தகைய கல்லூரியைக் கட்டுவதற்கான எதிர்கால திட்டத்தை , மாரா வரைந்து வருவதாக , கிராம மாவட்ட மேம்பாட்டு அமைச்சருமான சாஹிட் கூறினார்.
அத்துடன், வறிய நிலை மக்கள் பயனடைவதற்காக ஒதுக்கப்பட்ட மாரா நிலத்தில் அந்த, கட்டணம் வசூலிக்கும் கல்லூரி கட்டப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.