கோலாலம்பூர், பிப் 22 – நாட்டில் கல்வி நிலையங்களை உட்படுத்திய கோவிட் தொற்று மையங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாண்டின் 7 -வது வாரத்தில் அந்த எண்ணிக்கை 92 -ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். அதற்கு முந்தைய அந்த எண்ணிக்கை 61 -ஆக இருந்தது.
இவ்வேளையில், இவ்வாண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நாட்டில், கல்வி நிலையங்களை மொத்தம் 367 கோவிட் தொற்று மையங்கள் பதிவாகின.
அதில் 21 கோவிட் தொற்று மையங்கள் மட்டுமே முடிவுக்கு வந்திருப்பதாக நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.