Latestமலேசியா

கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது குடும்பச் சூழல்; SPMல் 11 ஏக்கள் பெற்ற ருகேஷ் பிள்ளை

ஈப்போ, ஜூன் 12 – வாழ்க்கையில் உச்சத்தை தொட்ட ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று தங்களின் இலக்கை அடைய தூண்டுகோளாக அமைந்திருக்கும்.

சிலருக்கு அவர்கள் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் கூட சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்திருக்கும்.

அப்படி ஒரு தருணத்தை சந்தித்தவர்தன் அண்மையில் வெளியான SPM தேர்வில் 11Aக்கள் பெற்ற ஈப்போ புந்தோங்கைச் சேர்ந்த ருகேஷ் பிள்ளை (Rukesh Pillai).

தன் சக வகுப்பு மாணவி கேட்ட ஒரு ஏளனமான கேள்வி, SPM தேர்வில் தன்னை 11 ஏக்கள் எடுக்க உந்துதல் அளித்துள்ளதாக கூறுகிறார் இவர்.

அன்று தன்னை இழிபடுத்தும் வகையில் கேட்ட வகுப்பு மாணவி கேட்ட அக்கேள்வியை அவமானமாகவோ,பொறாமையாகவோ என்னை யோசிக்க வைக்கவில்லை. மாறாக நிருபித்து காட்ட வேண்டும் என்ற சிந்தனையை தூண்டியதாக கூறுகிறார் ரூகேஷ்.

விவகரத்தால் தனது தாயை விட்டு பிரிந்து வாழும் ருகேஷ் பிள்ளை, நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவர்.

தந்தை சுரேந்தர் பிள்ளை (Surenther Pillai) சிங்கப்பூரில் பணிபுரிய, இவரோ ஈப்போவில் பெரியம்மா,பெரியப்பா, பாட்டி என பெரிய கூட்டுக் குடும்பத்தில் தனது தம்பிகளுடன் வசித்து வருகிறார.

மாணவர்களுக்குக் கல்வி கற்க எத்தனை வசதிகள் ஏற்பாடுச் செய்யப்படிருந்தாலும், நல்ல குடும்பச் சூழலே ஒரு மாணவருக்கு மிக முக்கியம் என்கிறார் ருகேஷ் பிள்ளையை தனது மகனாக அரவணைத்து வளர்த்து வரும் பெரியம்மா மலர் ரரசுராமன் (Malar Rarasuraman).

மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படித்து முன்னேற வேண்டுமானால், அது மாணவர்களை மட்டுமே சார்ந்தது அல்ல. குடும்பத்தின் பங்களிப்பும் அதில் முக்கியமானது.

அவ்வகையில், குடும்பத்தின் ஒத்துழைப்பு மற்றும் சுய முயற்சி ஆகியவற்றால் சிறந்த தேர்ச்சி அடைந்துள்ள ருகேஷ், இனி தொடர்ந்து இரசாயன பொறியியலில் கல்வியைத் தொடர எண்ண்ம் கொண்டுள்ளார்.

இவருக்கு மேலும் பல வெற்றிகள் வந்து குவிக வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!