
கோத்தா கினாபாலு, மார்ச் 25 – பிறரது மைகார்ட் அட்டையைப் பயன்படுத்தி, முறையான பத்திரங்கள் இல்லாத கள்ளக் குடியேறிகள் பயணம் செய்வதற்கான சேவையை வழங்கி வந்த கும்பல் ஒன்றை, MACC- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிடித்துள்ளது.
சபா, தாவாவ்-வில் செயல்பட்டு வந்த அந்த கும்பல், ஐந்து அமலாக்க அதிகாரிகளையும் உட்படுத்தியிருந்தது. 30-திலிருந்து 41 வயதுடைய அவர்கள் அனைவரும் MACC- க்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
அந்த கும்பல் , தங்களது சேவையைப் பயன்படுத்த விரும்பும் கள்ளக் குடியேறிகளுக்கு 2,500 ரிங்கிட் வரை கட்டணம் விதித்து வந்ததாக , MACC தெரிவித்தது.