கோலாலம்பூர், செப்டம்பர் -10 கள்ள நோட்டு வைத்திருந்ததன் பேரில் கேமரூன் நாட்டு ஆடவன் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
கள்ள நோட்டு வைத்திருந்தது, கள்ள நோட்டு அச்சடிக்கும் கருவிகளை வைத்திருந்து ஆகிய இரு குற்றச்சாட்டுகள் 51 வயது அந்நபர் மீது சுமத்தப்பட்டன.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரிக்ஃபீல்ட்சில் உள்ள பல்பொருள் கடையொன்றில் அசல் பணமெனக் கூறி பயன்படுத்தும் நோக்கில், 9 கட்டு 100 ரிங்கிட் கள்ள நோட்டுகளை வைத்திருந்தது முதல் குற்றச்சாட்டாகும்.
இரண்டாவது குற்றச்சாட்டின் படி, அதே நாள் இரவு செராசில் உள்ள வீட்டில் கள்ள நோட்டுகளுடன், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்துடன் அவன் பிடிபட்டான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 489-வது பிரிவின் கீழ் சந்தேக நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
முறையான பயணப் பத்திரமும் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வாடவனுக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை.