
பண்டார் பெர்மாய்சூரி, மார்ச் 8 – Kuala Terengganu -Kampung Raja- வில், கழன்று வந்த லாரியின் டயர் மோதி சாலையோரத்தில் வியாபாரம் செய்துக் கொண்டிந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த சம்பவத்தில் , 18 வயது Muhammad Airiel Rizman என்பவர் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக Setiu மாவட்ட போலீஸ் தலைவர் Afandi Hussin தெரிவித்தார்.
இவ்வேளையில், உயிரிழந்த அந்த இளைஞருடன் சேர்ந்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்த அவரது நண்பர் காயமடைந்ததாக அவர் கூறினார்.