
கோலாலம்பூர், ஜூன் 5 – பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் முயற்சியை கல்வி அமைச்சு விரைவில் தொடங்கவிருக்கிறது. கழிவறைகளை தூய்மையாக வைத்திருப்பதற்கன பொறுப்புணர்வை பள்ளிப் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் முயற்சியாக இது அமையும் . சுகாதாரம் மற்றும் தூய்மைக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறையை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு இது மிகவும் முக்கியம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்ததற்கு ஏற்ப கல்வி அமைச்சுகு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். அன்வாரின் ஆலோசனையை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தில் தமது அமைச்சு ஈடுபடும் என தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டினார். தூய்மைக்கான விழிப்புணர்வு மற்றும் கழிவறையை முறையாக எப்படி பயன்படுத்துவது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுத்தரம் நடப்பு திட்டங்களுக்கு ஏற்ப இந்த நடைமுறையின் மூலம் கழிவறைகளின் தூய்மைக்கு முன்னுரிமை எடுக்கப்படும் என Fadhlina Sidek தெரிவித்தார்.