
கோலாலம்பூர், ஜன 18 – Wifi- க்கு கடவுச் சொல் ; ஆனால் கழிப்பறைக்கும் கடவுச் சொல்லா ?
பொதுவாக உணவகங்கள், தங்களது கடையில் அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு, WiFi – இணையச் சேவைக்கான கடவுச் சொல்லை வழங்குவது வழக்கம்.
பெரும்பாலும், உணவுக்கான கட்டணத்தை செலுத்தும்போது வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ரசீதிலே அந்த கடவுச் சொல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், தலைநகர் புக்கிட் பிந்தாங்கிலுள்ள McDonald துரித உணவக ரசீதில், Wifi கடவுச் சொல்லிற்குப் பதிலாக கழிப்பறைக்கான கடவுச் சொல் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார் வாடிக்கையாளர் ஒருவர்.
அது உண்மையில் கழிப்பறைக்கான கடவுச் சொல்லாகத் தான் இருக்குமோ என்ற சந்தேகத்தில், அங்கிருந்த கழிப்பறைக்கு சென்றுபார்த்தபோது, அந்த கழிப்பறையின் கதவு , கடவுச் சொல்லை புகுத்தி திறக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு , அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியுற்றார்.
அதை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர இப்படியும் கூட இருக்குமா என வலைத்தளவாசிகள் ஆச்சியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.