Latestமலேசியா

மனநல முதலுதவி திட்டம் ; முதல் 10,000 பேருக்கு மனிதள அமைச்சு நிதி ஆதரவு

கோலாலம்பூர், பிப்ரவரி 19 – பணியிடத்தில் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளை சிறப்பாக கையாள ஏதுவாக, மனிதவள அமைச்சு OMHFA எனப்படும் தொழில்சார் மனநல முதலுதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அத்திட்டத்தில் பங்கேற்கும் முதல் பத்தாயிரம் பேருக்கான நிதி ஆதரவை தமதமைச்சு ஏற்குமென, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு, மனநல முதலுதவிகளை வழங்கும் பயிற்சிகளை அளிப்பதே அத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதில் பங்கேற்கும் முதல் பத்தாயிரம் பங்கேற்பாளர்களுக்கு நிதியாதரவு வழங்க, ஒரு கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை மனிதவள அமைச்சு ஒதுக்கியுள்ளதையும் ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.

NIOSH எனப்படும் தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் உள்ள ஆறு NIOSH அலுவலகங்களில் அந்த மூன்று நாள் பயிற்சி வழங்கப்படும்.

எனினும், அந்த பயிற்சி எப்பொழுது தொடங்கிறது என்ற விவரம் எதுவும் இன்னும் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!