பேங்கோக், ஆகஸ்ட் -22, தாய்லாந்தில் வீட்டுக் கழிவறையைப் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியான பாம்பு ஆடவரின் மர்ம உறுப்பை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் குறிய்து முகநூலில் பதிவு செய்துள்ளார் அவர்.
காலைக்கடன் முடித்து flush செய்யும் போது, கழிவறை குழிக்குள் இருந்த அப்பாம்பு அவர் கடித்திருக்கிறது.
உடனே அந்த ‘அழையாத விருந்தாளியை’, ஆத்திரத்தில் நெரித்துக் கொன்றதாக அவர் கூறியிருக்கின்றார்.
இதனிடையே பாம்புடன் கழிவறையில் இரத்தக் கறைகள் இருக்கும் புகைப்படங்களையும் அவர் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
மழைக்காலமாக இருப்பதால், அப்பாம்பு வெள்ள நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவே பிறரையும் அவர் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.