
ஈப்போ, மே 16 – கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் சடலம் கழிவு நீர் தொட்டியில் மீட்கப்பட்டது. கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் 40 வயதுக்குட்பட்ட அந்த ஆடவரின் சடலம் நள்ளிரவு மணி 12.20 அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கோலாகங்சார் போலீஸ் தலைவர் Omar Bakhtiar Yaacob தெரிவித்தார். ஒரு வீட்டிற்கு பின்னால் உள்ள கழிவு நீர் தொட்டியில் அந்த ஆடவரின் சடலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த படுகொலை தொடர்பில் அந்த ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த தம்பதியர் தலைமறைவாகி விட்டதால் அவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக Omar Bakhtiar Yaacob தெரிவித்தார்.