Latestமலேசியா

கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது ஹர்சிதா இல்லை; போலி தகவல்களைப் பரப்ப வேண்டாம்

கோலாலம்பூர், பிப் 21 – 16 வயது மாணவி Harshita காணாமல்போன விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையியில் அந்த மாணவி தொடர்பாக சமூக வலைத் தளத்தில் உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. தயவு செய்து அத்தகைய தகவல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி மேடை நாடாக தயாரிப்பாளரான எஸ்.டி. பாலா கேட்டுக்கொண்டார்.

கம்போங் பண்டான் Haminuddin Baki இடைநிலைப் பள்ளியைப் சேர்ந்த Harshita காணாமல்போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இம்மாணவி காணாமல்போன விவகாரம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்களது விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து பகிர்ந்துகொள்வதற்காக புக்கிட் அமான் போலீசார் அம்மாணவியின் பெற்றோர்களை அழைத்துள்ளதாக தமக்கு தெரியவந்திருப்பதாக எஸ்.டி. பாலா தெரிவித்தார்.

தமக்கு அறிமுகமான நண்பர் குடும்பத்தை சேர்ந்த Harshita காணாமல்போன விவகாரம் குறித்து அவரை கண்டுப்பிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடி முகநூலில் தாம் உதவிகோரி பதிவிட்டிருந்ததை பயன்படுத்தி சில தரப்பு தவறான தகவல்களை வாட்சாப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்ததையும் எஸ்.டி.பாலா சாடினார்.

வட இந்தியாவில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்படும் பழைய காணொளி காட்சியை வெளியிட்ட சில தரப்பு Harshita வுக்கு அறிமுகமான வங்காளதேசி ஆடவனால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது போன்று உரையாற்கிறார்.

தயவுசெய்து உண்மைக்கு புறம்பான காணொளி பகிரவேண்டாமென பாலா கேட்டுக்கொண்டார். காணாமல்போன Harshita குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் தகவல் அந்த இளம்பெண்ணை கண்டறிவதற்கு மேலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது முகநூல் வாயிலாக ஒரு காணொளி வெளியிட்டேன் . ஆனால் அதைக்கூட புரிந்துகொள்ளாமல் உண்மைக்கு புறப்பான தகவல்களை சிலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென எஸ்.டி பாலா கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!