பெய்ஜிங், பிப் 24 – சீனாவில், குடிசையில் தனது மனைவியை சங்கிலியால் கட்டிப் போட்டு வைத்த ஆடவனை அதிகராத்துவ தரப்பினர் கைது செய்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் சில முறை கடத்தப்பட்டு விற்கப்பட்டிருப்பதை அடுத்து, கடத்தல் தொடர்பில் 17 உள்ளூர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரியில் , ஜியாங்சு ( Jiangsu ) மாநிலத்தில் , நடுங்கும் குளிரில், கழுத்தில் பூட்டுடன் பெண் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த காணொளி வெளியாகி சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவில், இதற்கு முன்பிருந்த குடும்பத்திற்ககு ஒரு குழந்தை என்ற கொள்கையால், பாலின சமசீரற்ற நிலை உருவாகி, பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.