ஜோகூர் பாரு, மார்ச் 4 – IR4.0 இலக்கவியல் தொழில் புரட்சியில் இளைஞர்கள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கு அது குறித்து விழிப்புணர்வை பெறுவதற்கான நடவடிக்கை கஹாங் சட்டமன்ற தொகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ ஆர். வித்யானந்தன் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டிலிருந்து Kahang தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் தாம் விவசாயம், தொழிற்நுட்பம், தொழில் திறன் மற்றும் இலக்கவியல் தொழில் புரட்சி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளையும் அமல்படுத்தியுள்ளதாக ஜோகூர் ம.இகா தலைவருமான வித்யானந்தன் கூறினார்.
இத்தகைய தொழில் திறன் பயிற்சிகளில் கலந்துகொண்டு சான்றிதழ் பெறும் Kahang வட்டார இளைஞர்கள் நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெறமுடியும் என்றும் வித்யானந்தன் கூறினார்.