
புத்ரா ஜெயா, நவ 19 – T.B எனப்படும் காசநோய் நாட்டில் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் பதட்டம் அடைய வேண்டியதில்லையென சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார் . கோலாலம்பூரில் செராஸ் வட்டாரத்தில் சிலருக்கு காசநோய் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய டாக்டர் ஸாலிஹா, நிலைமையை சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவு கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். எனினும் இந்நோய் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றார். இத்தகைய தவறான தகவலால் பொதுமக்கள் பதட்டம் அடையும் சூழ்நிலை இருப்பதாக டாக்டர் ஸாலிஹா சுட்டிக்காட்டினார். காச நோய் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே பரவியுள்ளது. இந்நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் அருகேயுள்ள கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.