காஜாங், டிச 18 – காஜாங் தாமான் மேவாவில் குப்பை லோரி ஒன்று கவிழ்ந்து மூன்று வீடுகளில் மோதியதாக நம்பப்படுகிறது. நேற்று மாலை மணி 3.40 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Nazron Abdul Yosof ) தெரிவித்தார்.
லோரி ஓட்டுநரும், இதர மூன்று தொழிலாளர்களும் தாமான் மேவா பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
ஓடிக் கொண்டிருந்த அந்த லோரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறத்திலிருந்த மூன்று வீடுகளை மோதியபோதிலும் அந்த விபத்தினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
1987ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டத்தின் 43 (உட்பிரிவு 1) இன் விதியின் கீழ் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நஸ்ரோன் தெரிவித்தார்.