Latestமலேசியா

காஜாங்கில் கண் பார்வையிழந்த கணவர் படுகொலை; தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிய மனைவியும் தம்பியும்

புத்ராஜெயா, ஆகஸ்ட் -15 – சிலாங்கூர் காஜாங்கில், கண் பார்வையிழந்த கணவரை
நான்காண்டுகளுக்கு முன்னர் கொலை செய்த பெண்ணும் அவரின் தம்பியும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.

தூக்குத் தண்டணையை மாற்றி இருவருக்கும் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும் உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தள்ளுபடி செய்யுமாறு GS ஏஞ்சலா தேவி (Angela Dewi), GS விஜயா (Vijaya) இருவரும் செய்திருந்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

விஜயாவுக்கு 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அவர்கள் கைதான 2020 அக்டோபர் 10, 17-ஆம் தேதிகளிலிருந்து சிறைத்தண்டனை தொடங்குகிறது.

2020 அக்டோபர் 1-ம் தேதியன்று காஜாங், கம்போங் பாரு சுங்கை ச்சுவாவில் (Kampung Baru Sungai Chua) உள்ள ஒரு வீட்டில் 59 வயது R. தேவராஜுவை கொலை செய்ததாக, ஒன்றாக இணைந்து உணவகம் நடத்தும் ஏஞ்சலா தேவியும் அவரின் தம்பியும் முன்னதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இருவரும் குற்றமிழைத்தது கடந்தாண்டு உயர் நீதிமன்றத்தில் நிரூபணமாகி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!