காஜாங், ஜனவரி-9, சிலாங்கூர், காஜாங்கில் வீட்டு சமையலறையில் கை கழுவும் சிங்கி (sink) குழிக்குள் 2 மாத பெண் குழந்தையின் கால் சிக்கி கொண்ட சம்பவத்தால், குடும்பமே பதறிப் போனது.
Taman Seri Taming Cheras-சில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து பண்டார் துன் ஹுசேய்ன் ஓன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
குழந்தைக்குக் காயம் ஏதும் ஏற்படாத வகையில், சிங்கி குழியிலிருந்து அதன் கால் வெளியே எடுக்கப்பட்டு, குழந்தைப் பாதுகாப்பாகக் குழந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.